Posts

நிலாவாரை நிலவாகை மூலிகை விச முறிவு குணங்கள்

நிலாவாரை நிலவாகை என்றும் அழைக்கப்பெறும் மூலிகை அனைத்து வகையான விசகடிகளுக்கும் சிறந்தது மலமிளக்கி குணமுடையது அதிகம் சாப்பிட சுகபேதியாக்கும்.                    நிலவாகை சமுலம் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்த சூரணத்தை   பேய்சுரைக் குடுக்கையில் அடைத்து இந்த சூரணத்தை வெரு கடி அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்ள விஷ கடிகள் நீங்கும். 1.செருப்படி சாற்றில் சாப்பிட பெருச்சாளி கடி விஷம் தீரும்.  2.மூங்கில் இலைச் சாற்றில் சாப்பிட எலி கடி விஷம் தீரும்.  3.சாரணை இலை சாற்றில் சாப்பிட  மூஞ்சூரு விஷம் தீரும்.  4.உத்தாமணி இலைச் சாற்றில் சாப்பிட சிறு பாம்பு கடி விஷம் தீரும்.  5.விழுதி இலைச் சாற்றில் சாப்பிட நல்ல பாம்பு கடி விஷம் தீரும்.  6. சிறு குரிஞ்சான் சாற்றில் சாப்பிட விரியன் பாம்பு கடி விஷம் தீரும்.  7.எலுமிச்சம் பழ சாற்றில் சாப்பிட எல்லா விஷ கடிகளும் தீரும்.  8.சிறு பாகற்காய் சாற்றில் சாப்பிட தேள் செய்யான் நட்டுவாக்காளி விஷம் தீரும்.  9.செவ்அரளி அல்லது அவுரி வேர் சாற்றில் சாப்ப...

ஆண்களுக்கான அருமருந்து

ஆண்களுக்கான மன்மத வீரிய சூரணம்  தேவையான பொருட்கள்: முருங்கை விதை - 50 கிராம்  முருங்கை பிசின் - 50 கிராம் கோரைக்கிழங்கு - 50 கிராம் பூனைகாலி விதை - 50 கிராம் நிலப்பனங்கிழங்கு - 50 கிராம் ஓமம் - 50 கிராம் சாரப்பருப்பு - 50 கிராம் ஜாதிக்காய் - 50 கிராம் முருங்கை பிஞ்சு (நாரில்லாதது) - 100 கிராம் ஓரிதழ் தாமரை (சமூலம்) - 500 கிராம்  செய்முறை : அனைத்து மருந்துகளையும் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும். இதை தினமும் பசும்பாலிலோ அல்லது வெள்ளாட்டு பாலிலோ கலந்து குடித்து வரவும்.  காலை, இரவு என இரண்டு வேளை உணவிற்கு பின். உபயோகம்: இதனை தொடர்ந்து சாப்பிட 60 வயதுள்ளவர்கள் கூட 20 வயது வாலிபனைப் போல் உடலுறவில் ஈடுபடலாம். உடலழகும், முகபொலிவும், உடல் ஆரோக்யமும் உண்டாகும். மற்றும் விந்தை தடிப்பாக்கி விந்து முந்துதலை கட்டுப்படுத்துகிறது. இத்துடன் லிங்கம் அயத்தங்கம் வெள்ளி பற்பங்கள் சேர்த்துண்ண சிறந்த பலன்கள் கிடைக்கிறது. மருந்து பலகீனத்திற்கு ஏற்றாற்போல மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும். மருந்துகள் ந...

மஞ்சட்காமாலை மருத்துவம்

கல்லீரல் மனித சரீரத்தின் முக்கியமான மிகப்பெரிய உள்ளுறுப்பு இதைக் கவனத்துடன் பாதுகாத்தல் வேண்டும் இதனால் பல்வேறு நோய்கள் தோன்றாது காக்கும். உடலில் அதிகரித்த பித்தம் கல்லீரலில் கொழுப்பு பேட்டி லிவர் Fatty liver கல்லீரல் சுருக்கம் லிவர் சிரோசிஸ் liver chirosis கல்லீரல் குறைபாடுகள் அதிகமாக மது அருந்தியதால் கல்லீரல் கெடுதல். இரவில் அதிக நேரம் கண் விழித்தல் பழைய அசுத்தமான நீரினைக்குடித்தல் போன்ற காரணங்களினால் மனித உடலில் மஞ்சட் காமாலை உருவாகி பிலிரூபின் என்னும் பித்த நீர் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிடுகிறது Hepatitis b c போன்ற வைரஸ் தொற்றுகளும் உருவாகிறது. அதிகம் கல்லீரலுக்கு வேலை தருபவர்கள் இயற்கை Liver tonics tablets மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.மஞ்சட்காமாலைக்கு நமது மருத்துவமனையில் நோய்க்கு ஏற்ப பாரம்பரிய பச்சிலை மருந்து சித்த ஆயுர்வேத இயற்கை மருந்துகள் வழங்கி சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. Hepatitis b வைரசால் பணிக்காக வெளிநாடு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி நலமாக்கலாம்.  ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா பாரதிபுரம் பள்ளபாளையம் கோவை 9597125669 ...

இயற்கை முறையில் பித்தம் காமாலை குறைய

*பித்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்க்கும் இயற்கை மருத்துவ முறைகளும்* உடலில் பித்தம் அதிகமானால் மஞ்சட்காமாலை உண்டாகும் கைகால் எரியும். அல்சர் அசிடிட்டி உண்டாகும்.  👉கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது.  👉 முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செரிமாணத்திற்கு  உதவுகிறது.    👉உடலில் பித்தம் அதிகமாகும்பொழுது வாய்வு பிரச்சனை, பாதம் மற்றும் உதடுகளில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வறட்சியாகவும், கடினமாகவும்  காணப்படும்.   👉 உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் உடலில் பித்தம் அதிகமாகும். அதேபோல் மது மற்றும்  புகைபிடித்தல் போன்ற மோசமான பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உடலில் பித்தத்தை அதிகரிக்கும்.   👉தினமும் அளவுக்கு அதிகமாக டீ, காபி போன்ற பானங்களை அருந்தும்பொழுது ப...

நவக்கிரகங்களின் ப்ரீதியும் பரிகாரங்களும்

🌺 *நவக்கிரக ப்ரீதியும் தோஷ* *பரிகாரங்களும்* நவகிரகங்களுக்கு  தனித்தனியாக தோஷ பரிகாரங்கள் மேற்கொள்ள சரியான வழிமுறைகள் ஜோதிடத்தில்  உள்ளன அந்தந்த கிரகங்களுக்கு பிடித்தவைகளை அந்த கிரக காலத்தில் செய்திட கிரகங்கள் மனமகிழ்வு ப்ரீதி அடைவார்கள் இதனால் நற்பலன்கள் கிட்டும். சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும். சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளரலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும். அங்காரக பகவானுக்குச் செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும். புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தா...

கைவிரல்களில் மருத்துவம்

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். சுஜோக் மருத்துவம் என்று இம்முறையை பெயரிட்டு அழைக்கப்படுகிறது.  கட்டை விரல்; உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது. ஆள்காட்டி விரல்; உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது. நடுவிரல்; நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி...

ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா

உடல் நலக்   குறிப்புகள்            *ஏப்பம்:* *அடிக்கடி ஏப்பம் வருகிறதா?*  வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.   *பூச்சிக்கடிவலி:* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்  தேய்க்கவும்.   *உடல் மெலிய:* கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.   *வயிற்றுப்புண்:* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   *வயிற்றுப் போக்கு:* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மைபோல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.