Posts

Showing posts from January, 2023

ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா

உடல் நலக்   குறிப்புகள்            *ஏப்பம்:* *அடிக்கடி ஏப்பம் வருகிறதா?*  வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.   *பூச்சிக்கடிவலி:* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்  தேய்க்கவும்.   *உடல் மெலிய:* கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.   *வயிற்றுப்புண்:* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   *வயிற்றுப் போக்கு:* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மைபோல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

மஞ்சளின் மகிமை மருத்துவம்

Image
கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? மஞ்சளை பயன்படுத்தும் முறை அதிக கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டு குறிப்புகள்: மஞ்சள் பொதுவாக வீடுகளில் உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் சருமத்தின் அழகை அதிகரிப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல விதங்களில் பயன்படுகிறது. மஞ்சள் பழங்காலத்திலிருந்தே நோய்த்தொற்றுகள், காயங்கள் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மசாலாவாக மஞ்சள் உள்ளது. மஞ்சள் சந்தையில் எளிதில் கிடைக்கின்றது. இதை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மஞ்சள் உதவுகிறது. கொலஸ்ட்ராலைப் பராமரிக்க மஞ்சள் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். இதய நோய்க்கு நன்மை பயக்கும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை பல ஆபத்துகள் வரக்கூடும். மஞ்சள் கொண்டு கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க அவ்வப்போது பல ஆய்வுகள்,...

இளமை வலிமை பெறும் நடைமுறைகள்

*இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.* விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும். விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது. விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது. விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக...