Posts

கடுக்காய் பயன்கள் ஹரிதகி சித்த ஆயுர்வேத மாமருந்து

Image
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது.  அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்! கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம். 1. கண் பார்வைக் கோளாறுகள் 2. காது கேளாமை 3. சுவையின்மை 4. பித்த நோய்கள் 5. வாய்ப்புண் 6. நாக்குப்புண் 7. மூக்குப்புண் 8. தொண்டைப்புண் 9. இரைப்பைப்புண் 10. குடற்புண் 11. ஆசனப்புண் 12. அக்கி, தேமல், படை 13. பிற தோல் நோய்கள் 14. உடல் உஷ்ணம் 15. வெள்ளைப்படுதல் 16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண் 17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு 18. சதையடைப்பு, நீரடைப்பு 19. பாத எரிச்சல், மூல எரிச்சல் 20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி 21. ரத்தபேதி 22. சர்க்கரை நோய், இதய நோய் 23. மூட்டு வலி, உடல் பலவீனம் 24. உடல் பருமன் 25. ரத்தக் கோளாறுகள் 26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த...

யோக முத்திரைகள்

#ஞான_முத்திரைகள். சாம்பவி, பைரவி, கேசரி என மூன்று முத்திரைகள் உள்ளது. பரிசுத்தமாகிய சாம்பவி எனும் முத்திரையை சிவயோகம் என்றும், இதில் இருக்கத்தக்கவனை  சாதக சாத்தியனென்றும், இந்த சாம்பவி முத்திரையிலிருந்து சதாநிட்டை சாதகம் செய்யும் சாதகர்  நாதானந்தம் பெறுவார் என்றும், அந்த நாத வசமுற்றால் மயக்கம் தோன்றும், அது நீங்கும் வகையில் நின்றால் அருட்டரிசன முதலியமாய் காண்பானாதிகளிறந்து பஞ்சாட்சர முதலியவைகளோடு யுங்கித்து விதமறக் கலக்கின்ற மௌன நிலையடைந்து விலங்குவார். மேலும் இந்த பிரதான சாம்பவி முத்திரையின் சாதனம் என்பது இரண்டு கண்களையும் சிதாகாசத்தில் இமையை அசைக்காமல் பொருந்த நிறுத்தி  மனதிலே உதிக்கின்ற கருத்தை உள்ளடக்கி அங்ஙகனம் பொருந்திய நெறியாலே மன மலை தலையழித்து  அறிவறியாமையும் நீங்க  சுத்த சாதனஞ்செய்து நித்திரையை செய்யாமல் செய்து அதாவது தூங்காமல் தூங்குவது தான் இந்த பிரதான முத்திரையின் சாதனம். இதைத்தான் ஔவையார்  "இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம்" -என்றும், "தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்      பாங்குகண்டா ல்லோ பயன்க...

உடலுக்குத் தேவையான தண்ணீர்

மனித உடலுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை அறிந்து நீர் பருகி நீடூழி வாழலாம்  1.தலைபாரம் தலைவலி பள்ளி கல்லூரி பணிக்காலத்தில் நாம் அனைவரும் படிக்கும் போது தலைவலி வந்தவுடன் படிக்காமல் புத்தகங்களை காகிதங்களை மூடி வைத்துவிட்டு   தூங்கிவிடுவோம், தலைவலி என்ற காரணத்தால் சோர்வாகி உறங்குவோம் ஆனால் தண்ணீர் போதிய அளவு குடிக்காவிட்டாலும் தலைவலி வரும் என்பது உண்மை. பெரும்பாலான நேரங்களில் தலைவலி நீரிழப்பு De hydrate  காரணமாக ஏற்படுகிறது. 2. மனம் கவனம் செலுத்துவதில் சிக்கல் தேவையான தண்ணீர் சத்து இல்லாமல், கவனம் செலுத்துவதில் சிரமப்படுவோம். 3. நிறம் மாறிய சிறுநீர் கடுகடுப்பு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரின் நிறத்தை மாற்றும் எரிச்சல் கடுகடுப்பை உண்டாக்கும்  4. வறட்சியான உலர் தோல் உங்கள் உடல் மிகக் குறைந்த அளவு தண்ணீரைப் பெற்றால், இது உங்கள் தோலில் தெரியும் உடலுக்கு கிடைக்கக்கூடிய நீர்த்திரவங்கள் முக்கிய உறுப்புகளுக்கு  வழங்குவதற்கு முதலில் பயன்படுத்தப்படுகின்றன, அதனால்தான் தோல் மிகவும் வறட்சியாகும் தோலின் பளபளப்புத்தன்மை குறைந்திடும் 5. நீர் குறைவினால் ம...

சிலாஜித் டிராப்ஸ் Shilajit drops

Image
*சிலாஜித் டிராப்ஸ்                      சிலாஜித் இமாலய மலைகளில் பாறைகளுக்கு அடியில் விளையும்  இயற்கைத் தாதுப்பொருள் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் சிறப்புடையது பொதுவாக வட இந்தியாவில் ஆண்மை பெருக்கி மருந்துகளில் பிரபலமாக உள்ளது ஆனால் அதன் பயன்கள் எண்ணற்றவை இமாலயக் குளிரில் யோகம் செய்யும் யோகிகள் இதனை காய கல்பமாக சாப்பிடுகின்றனர் கடும் குளிரிலும் நோய்எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச்செய்கிறது. உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் Fulvic acid என்ற அதிசய ரசாயனப்பண்பு இயற்கையாகவே உள்ளது தனிச்சிறப்பு மற்றும் இதில் 84 விதமான மினரல் சத்துக்களும் உள்ளன எண்ணற்ற நோய்களுக்கு பயன்படக்கூடியது ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்பு அதிகமுள்ளது இது உடல்நலத்தையும் சிறந்த நினைவாற்றலையும் தருகிறது வீக்கம் வலிகளை குறைக்கிறது சக்திதரும் டானிக்காக செயல்படுகிறது உடலில் அதிகமாக உள்ள துர்நீர்களை நீக்கி மேனியை பொலிவடையச் செய்கிறது இத்தகைய குணம் கொண்ட சிலாஜித் உடன் அஸ்வகந்தா Ext முருங்கை ext கீரீன் டீ ext குங்குமப்பூ வெள்ளி பற்பம்  தங்க பற்பம்  சேர்த்து லிக்ய...

தென்னையின் மருத்துவம்

*தென்னம்பூ மணப்பாகு* பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது. தென்னம் பூ (பூம்பாளை) தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும். வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து,...

எளிய வீட்டு வைத்தியக் குறிப்புக்கள்

நோய் அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவமனை செல்ல இயலாத சூழலில் வீட்டில் உள்ள மூலிகை உணவுப் பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடை...

ஆடாதோடா மூலிகை பயன்கள் ஆடாத உடலும் ஆடும் பாடாத குரலும் பாடும்

*ஆடாதொடா இலையில்(ஆடாதொடை) & தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்!*    👉 ஆடாதொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால,ஆடாத உடலும் ஆடும்,பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடாதொடை மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.  👉 காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும். 👉 உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும். 👉 ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும். 👉 நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும். 👉 சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.  *இந்த இலைகள் மூலிகைப் பொடியாகவும் மணப்பாகு வடிவிலும் நாட்டு மருந்துக்கடை...