யோக முத்திரைகள்
#ஞான_முத்திரைகள்.
சாம்பவி, பைரவி, கேசரி என மூன்று முத்திரைகள் உள்ளது.
பரிசுத்தமாகிய சாம்பவி எனும் முத்திரையை சிவயோகம் என்றும்,
இதில் இருக்கத்தக்கவனை
சாதக சாத்தியனென்றும்,
இந்த சாம்பவி முத்திரையிலிருந்து சதாநிட்டை சாதகம் செய்யும் சாதகர்
நாதானந்தம் பெறுவார் என்றும்,
அந்த நாத வசமுற்றால் மயக்கம் தோன்றும்,
அது நீங்கும் வகையில் நின்றால் அருட்டரிசன முதலியமாய் காண்பானாதிகளிறந்து பஞ்சாட்சர முதலியவைகளோடு
யுங்கித்து விதமறக் கலக்கின்ற மௌன நிலையடைந்து விலங்குவார்.
மேலும் இந்த பிரதான சாம்பவி முத்திரையின் சாதனம் என்பது இரண்டு கண்களையும் சிதாகாசத்தில் இமையை அசைக்காமல் பொருந்த நிறுத்தி
மனதிலே உதிக்கின்ற கருத்தை உள்ளடக்கி அங்ஙகனம் பொருந்திய நெறியாலே மன மலை தலையழித்து
அறிவறியாமையும் நீங்க
சுத்த சாதனஞ்செய்து நித்திரையை செய்யாமல் செய்து அதாவது தூங்காமல் தூங்குவது தான் இந்த பிரதான முத்திரையின் சாதனம்.
இதைத்தான் ஔவையார்
"இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம்"
-என்றும்,
"தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்
பாங்குகண்டா ல்லோ பயன்காண்பேன் பைங்கிளியே"வென்று
- தாயுமானவரும்,
"கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாம,
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்கலாம்"
என்கிறார் -பத்திரிகிரியார்.
சரி அடுத்து ஞானயோகம் என்னவென்று பார்க்கலாம்.......
உடலெல்லாம் தாயின் அம்சமும்,
அப்பனுக்கு எலும்போடே நரம் பிரண்டென்றும்,
அந்த இரண்டுலே ஒன்று சக்தியென்றும், மற்றொன்று (பிரணவாயு) சிவமென்றும் சொல்லப்படுகின்ற இந்த இரண்டும் ஒன்றாய்க்கூடி மைய்யமாக நிற்பதே
சுழிமுனை என்றாகிறது.
இந்த சுழிமுனையிலே மூன்று காந்தி உண்டாகும்.
அதில் பிரணன் எனும் வாயு நெஞ்சிலே தாமரை நூல் போல ஆடிக்கொண்டே இருக்கும்,
அதிலிரட்டித்த அபானன் வாயு காணும் போது ஞானயோகம் கிடைக்கும்.
இந்த ஞானயோகத்தால் உடலானது கைலாயதேகமாகும்.
இந்த ஞானத்தை நவக்கோடி சித்தர்களும் கண்டார்கள்.
சரி அடுத்து ஞானசாதன நிட்டை என்பதை தெரிந்துக்கொள்வது அவசியம்
வாங்க அதையும் தெரிந்துகொள்வோம்.
ஞானசாதன நிட்டை என்றால் மான்தோல், புலித்தோல், சித்திராசனம், வெள்ளை துணி, தர்ப்பை புல்'லில் செய்த பாய்
இந்த ஐந்தில் ஒன்றை
பூமியில் விரித்து சலனமற்ற ஏகாந்தத்தானத்தில் வட திசை முகம் பார்த்து அங்காசனம் செய்து
ஞானநிட்டை கூட வேண்டும் என்பார்கள்.
அது என்ன அங்காசனம்..?
பத்திரம், வீரம், குக்குடம், அருமையான பதுமாம், கோமுகம் இவை ஐந்தும் ஞானசாதனத்திற்குறியவகைள் ஆகும்.
இந்த அங்காசனத்திலிருந்து நிட்டை புரிதலே சதாநிட்டை என்று சொல்லப்படுகிறது,
இடை, கண்டம் (தொண்டை) தலை, கண் இந்த நான்கும்
ஸ்தம்பத்தைப்போல நெறித்திருக்கவும், மனமானது விஷபாகாரங்களை பற்றாமலிருக்கவும், இன்பதை பெரும்படி நிலையாமனினைத்துப் பிரகாசிக்கின்ற ஒப்பற்ற நிலையில் சதாகாலமும் சாட்சித் தன்மையைப் பொருந்தி இருந்தாலே ஞான நிட்டை என்பதாகும்.
இந்த ஞானநிட்டை கைவரப்பெற்றால்
பர பிரம்மத்துடன் கலந்து
இறப்பு பிறப்பு நீங்கி தேகத்துடன் ஜீவன் முக்தியடையலாம்.
இந்த நிட்டையில் மனம் அசையுமாயினும்; மயக்கத்தைச் செய்யுமாயினும் ஆதனத்திருந்திலிருந்து எழுந்து பாத்தடி நடந்து பின் இந்த நிட்டை உறுதிப்படுத்துவதே
ஞான யோகிக்குரிய குணம்.
நிட்டையில் மயக்கமற ஏறமுடியாதவர்கள் அந்த மயக்கம் தீர பஞ்சாட்சார மந்திரங்களை செபித்து ஆத்ம மலங்களை பரிபாகம் செய்யலாம்.
உதாரணமாக:-
"ஆதனத்திலிருந்தே சாதனைகளைச் செய்யும் போ தலை தருமன மடங்காமல் போதுமேயெனினுங் கேவலமயக்கம் புரியுமே யெனினுமங் கெழுத்து, தீதியினையீரடியுலாவந்தே நிலவுமாதனத்திற் பொருத்தி" என்று
நிஷ்டானுபூதியில் தெளிவாக குறிப்பு உள்ளதை இங்கே நினைவுக்கூறுகின்றேன்
படித்ததில் பிடித்தது
Comments
Post a Comment