உடலுக்குத் தேவையான தண்ணீர்
மனித உடலுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை அறிந்து நீர் பருகி நீடூழி வாழலாம் 1.தலைபாரம் தலைவலி பள்ளி கல்லூரி பணிக்காலத்தில் நாம் அனைவரும் படிக்கும் போது தலைவலி வந்தவுடன் படிக்காமல் புத்தகங்களை காகிதங்களை மூடி வைத்துவிட்டு தூங்கிவிடுவோம், தலைவலி என்ற காரணத்தால் சோர்வாகி உறங்குவோம் ஆனால் தண்ணீர் போதிய அளவு குடிக்காவிட்டாலும் தலைவலி வரும் என்பது உண்மை. பெரும்பாலான நேரங்களில் தலைவலி நீரிழப்பு De hydrate காரணமாக ஏற்படுகிறது. 2. மனம் கவனம் செலுத்துவதில் சிக்கல் தேவையான தண்ணீர் சத்து இல்லாமல், கவனம் செலுத்துவதில் சிரமப்படுவோம். 3. நிறம் மாறிய சிறுநீர் கடுகடுப்பு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரின் நிறத்தை மாற்றும் எரிச்சல் கடுகடுப்பை உண்டாக்கும் 4. வறட்சியான உலர் தோல் உங்கள் உடல் மிகக் குறைந்த அளவு தண்ணீரைப் பெற்றால், இது உங்கள் தோலில் தெரியும் உடலுக்கு கிடைக்கக்கூடிய நீர்த்திரவங்கள் முக்கிய உறுப்புகளுக்கு வழங்குவதற்கு முதலில் பயன்படுத்தப்படுகின்றன, அதனால்தான் தோல் மிகவும் வறட்சியாகும் தோலின் பளபளப்புத்தன்மை குறைந்திடும் 5. நீர் குறைவினால் ம...