உடலுக்குத் தேவையான தண்ணீர்

மனித உடலுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை அறிந்து நீர் பருகி நீடூழி வாழலாம் 

1.தலைபாரம் தலைவலி

பள்ளி கல்லூரி பணிக்காலத்தில் நாம் அனைவரும் படிக்கும் போது தலைவலி வந்தவுடன் படிக்காமல் புத்தகங்களை காகிதங்களை மூடி வைத்துவிட்டு   தூங்கிவிடுவோம், தலைவலி என்ற காரணத்தால் சோர்வாகி உறங்குவோம்

ஆனால் தண்ணீர் போதிய அளவு குடிக்காவிட்டாலும் தலைவலி வரும் என்பது உண்மை. பெரும்பாலான நேரங்களில் தலைவலி நீரிழப்பு De hydrate  காரணமாக ஏற்படுகிறது.

2. மனம் கவனம் செலுத்துவதில் சிக்கல்

தேவையான தண்ணீர் சத்து இல்லாமல், கவனம் செலுத்துவதில் சிரமப்படுவோம்.

3. நிறம் மாறிய சிறுநீர் கடுகடுப்பு

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரின் நிறத்தை மாற்றும் எரிச்சல் கடுகடுப்பை உண்டாக்கும் 

4. வறட்சியான உலர் தோல்

உங்கள் உடல் மிகக் குறைந்த அளவு தண்ணீரைப் பெற்றால், இது உங்கள் தோலில் தெரியும் உடலுக்கு கிடைக்கக்கூடிய நீர்த்திரவங்கள் முக்கிய உறுப்புகளுக்கு  வழங்குவதற்கு முதலில் பயன்படுத்தப்படுகின்றன, அதனால்தான் தோல் மிகவும் வறட்சியாகும் தோலின் பளபளப்புத்தன்மை குறைந்திடும்

5. நீர் குறைவினால் மலச்சிக்கல்

உடலுக்குத் தேவையான  நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது (முழு தானிய பொருட்கள் போன்றவை), அப்பொழுது ஜீரணிக்கத் தேவையான  நிறைய திரவங்களை குடிக்க வேண்டும். இது நல்ல குடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

6. தாகத்தால் மயக்கம்

தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் குறைந்த இரத்த அழுத்தம். இது , நீரேற்றம் நீர் பற்றாக்குறையால் ஏற்படலாம்.

7. உடல் சோர்வு

நீரிழப்பு உடல் வளர்சிதை( metabolism)மாற்றத்தை நிறுத்த வழிவகுக்கிறது, இது உடலுக்கு சோர்வையும்  தூக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

8.வலிகள் தசைப்பிடிப்பு

உடலுக்குத்தேவையான தாதுஉப்புகள்  எலக்ட்ரோலைட் சமநிலையின்மையால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதனால்  தசை இழுத்துப்பிடித்து வலியை உண்டாக்கும். இதில் மெக்னீசியம் மற்றும் சோடியம் குளோரைடு. நாம் அதிகமாக வியர்த்து, போதுமான தண்ணீர் (எலக்ட்ரோலைட்டுகள் உட்பட) குடிக்காமல் இருந்தால்,  தசை பிடிப்புகள் நரம்பு வலிகள் உணடாக்கக்கூடும்  ஆதலால் தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துவதை  மறவாமல் அருந்துங்கள் 

Comments

Popular posts from this blog

யோக முத்திரைகள்

கைவிரல்களில் மருத்துவம்

சிலாஜித் டிராப்ஸ் Shilajit drops