யோக முத்திரைகள்
#ஞான_முத்திரைகள். சாம்பவி, பைரவி, கேசரி என மூன்று முத்திரைகள் உள்ளது. பரிசுத்தமாகிய சாம்பவி எனும் முத்திரையை சிவயோகம் என்றும், இதில் இருக்கத்தக்கவனை சாதக சாத்தியனென்றும், இந்த சாம்பவி முத்திரையிலிருந்து சதாநிட்டை சாதகம் செய்யும் சாதகர் நாதானந்தம் பெறுவார் என்றும், அந்த நாத வசமுற்றால் மயக்கம் தோன்றும், அது நீங்கும் வகையில் நின்றால் அருட்டரிசன முதலியமாய் காண்பானாதிகளிறந்து பஞ்சாட்சர முதலியவைகளோடு யுங்கித்து விதமறக் கலக்கின்ற மௌன நிலையடைந்து விலங்குவார். மேலும் இந்த பிரதான சாம்பவி முத்திரையின் சாதனம் என்பது இரண்டு கண்களையும் சிதாகாசத்தில் இமையை அசைக்காமல் பொருந்த நிறுத்தி மனதிலே உதிக்கின்ற கருத்தை உள்ளடக்கி அங்ஙகனம் பொருந்திய நெறியாலே மன மலை தலையழித்து அறிவறியாமையும் நீங்க சுத்த சாதனஞ்செய்து நித்திரையை செய்யாமல் செய்து அதாவது தூங்காமல் தூங்குவது தான் இந்த பிரதான முத்திரையின் சாதனம். இதைத்தான் ஔவையார் "இமையாத நாட்டத் திருந்துணர் வாருக் கமையாத வானந்த மாம்" -என்றும், "தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்குகண்டா ல்லோ பயன்க...