நிலாவாரை நிலவாகை மூலிகை விச முறிவு குணங்கள்

நிலாவாரை நிலவாகை என்றும் அழைக்கப்பெறும் மூலிகை அனைத்து வகையான விசகடிகளுக்கும் சிறந்தது மலமிளக்கி குணமுடையது அதிகம் சாப்பிட சுகபேதியாக்கும்.

                   நிலவாகை சமுலம் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்த சூரணத்தை   பேய்சுரைக் குடுக்கையில் அடைத்து இந்த சூரணத்தை வெரு கடி அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்ள விஷ கடிகள் நீங்கும்.

1.செருப்படி சாற்றில் சாப்பிட பெருச்சாளி கடி விஷம் தீரும்.

 2.மூங்கில் இலைச் சாற்றில் சாப்பிட எலி கடி விஷம் தீரும்.

 3.சாரணை இலை சாற்றில் சாப்பிட  மூஞ்சூரு விஷம் தீரும்.

 4.உத்தாமணி இலைச் சாற்றில் சாப்பிட சிறு பாம்பு கடி விஷம் தீரும்.

 5.விழுதி இலைச் சாற்றில் சாப்பிட நல்ல பாம்பு கடி விஷம் தீரும்.

 6. சிறு குரிஞ்சான் சாற்றில் சாப்பிட விரியன் பாம்பு கடி விஷம் தீரும்.

 7.எலுமிச்சம் பழ சாற்றில் சாப்பிட எல்லா விஷ கடிகளும் தீரும்.

 8.சிறு பாகற்காய் சாற்றில் சாப்பிட தேள் செய்யான் நட்டுவாக்காளி விஷம் தீரும்.

 9.செவ்அரளி அல்லது அவுரி வேர் சாற்றில் சாப்பிட அட்டை, ஓணான், பூனை, அரணை, குரங்கு, பேய் நாய், நரி போன்றவற்றின் விஷ கடிகள் தீரும்.

10.கரிசலாங்கண்ணிஇலைச் சாற்றில் சாப்பிட இருமல் ஈளை இழுப்பு தீரும்.

11. செந்தட்டி சாற்றில் சாப்பிட         ஆஸ்த்துமா    தீரும்.

 12 .நொச்சி இலை சாற்றில் சாப்பிட முகவாதம் முடக்குவாதம் பச்ச வாதம் தீரும்.
 13.நல்லென்னையில் சாப்பிடவிக்கல் ஒக்காளம் தீரும்.

 14.தேனில் சாப்பிட உடல் எடை, கெட்ட கொழுப்பு தீரும்.

 15. நெய்யில் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

 16. பிரண்டை சாற்றில் சாப்பிட முயல் வலி காக்கா வலிப்பு குதிரை வலிப்பு தீரும்.

 17. முருங்கை இலை சாற்றில் சாப்பிட வயிற்றில் உள்ள ஈடு மருந்து நீங்கும்.

 18. குப்பை மேனி சாற்றில் சாப்பிட தோல் வியாதிகள் பெண்களின் மசக்கை வாந்தி தீரும்.

 19. எருமை தயிரில் உட்கொள்ள வாந்திபேதி,கழிச்சல், கிராணி தீரும்.

 20. வேப்பிலை சாற்றில் உட்கொள்ள சக்கரை நோய், சிறு பூரான் கடி தீரும்.

Comments

Popular posts from this blog

யோக முத்திரைகள்

கைவிரல்களில் மருத்துவம்

சிலாஜித் டிராப்ஸ் Shilajit drops