நிலாவாரை நிலவாகை மூலிகை விச முறிவு குணங்கள்
நிலாவாரை நிலவாகை என்றும் அழைக்கப்பெறும் மூலிகை அனைத்து வகையான விசகடிகளுக்கும் சிறந்தது மலமிளக்கி குணமுடையது அதிகம் சாப்பிட சுகபேதியாக்கும். நிலவாகை சமுலம் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்த சூரணத்தை பேய்சுரைக் குடுக்கையில் அடைத்து இந்த சூரணத்தை வெரு கடி அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்ள விஷ கடிகள் நீங்கும். 1.செருப்படி சாற்றில் சாப்பிட பெருச்சாளி கடி விஷம் தீரும். 2.மூங்கில் இலைச் சாற்றில் சாப்பிட எலி கடி விஷம் தீரும். 3.சாரணை இலை சாற்றில் சாப்பிட மூஞ்சூரு விஷம் தீரும். 4.உத்தாமணி இலைச் சாற்றில் சாப்பிட சிறு பாம்பு கடி விஷம் தீரும். 5.விழுதி இலைச் சாற்றில் சாப்பிட நல்ல பாம்பு கடி விஷம் தீரும். 6. சிறு குரிஞ்சான் சாற்றில் சாப்பிட விரியன் பாம்பு கடி விஷம் தீரும். 7.எலுமிச்சம் பழ சாற்றில் சாப்பிட எல்லா விஷ கடிகளும் தீரும். 8.சிறு பாகற்காய் சாற்றில் சாப்பிட தேள் செய்யான் நட்டுவாக்காளி விஷம் தீரும். 9.செவ்அரளி அல்லது அவுரி வேர் சாற்றில் சாப்ப...