இளமை வலிமை பெறும் நடைமுறைகள்
*இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.* விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும். விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது. விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது. விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக...